மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

எழுவர் விடுதலை: மீண்டும் தீர்மானம்?

எழுவர் விடுதலை: மீண்டும் தீர்மானம்?

எழுவர் விடுதலை குறித்து விரைந்து ஆலோசனை நடத்தி  முதல்வர் நல்ல முடிவெடுப்பார் என்று சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலுவையில் இருப்பதை அதற்கான காரணமாகக் கூறியது.

ஆளுநர்  முடிவு எடுக்காததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இதுகுறித்து, உரிய முடிவெடுக்க வேண்டும் என, அப்போதையை எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு வலியுறுத்தி வந்தன.

தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில்,  ஏழு பேர்  விடுதலை குறித்து  உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின், எழுவர் விடுதலை குறித்து  ஆலோசனை நடத்தினார். எழுவர் விடுதலை விவகாரத்தில் உள்ள சிக்கல்கள், ஆளுநர் தாமதம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பின் நேற்று இரவு,  செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஏழு பேர்  விடுதலை குறித்து ஆலோசனை செய்து விரைந்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்.  இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் அரசு மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றும்.  விரைவில்  அடுத்த ஆலோசனை  நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மரத்தா இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் ரகுபதி, “தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதுதான் முதல்வரின் நோக்கம். இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட்டு, அது நிலைநிறுத்தப்படும்” என்றார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 12 மே 2021