மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி : உயர் நீதிமன்றம்!

ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி : உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகளை மாற்றிய போதிலும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்யாதது திருப்தி அளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 7ஆம் தேதி முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு நேற்று (மே 10) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு, புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக அரசு பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாமல், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவது திருப்தி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டார். 2020, மே, ஜூன் மாதங்களில் வைரஸ் பரவல் அதிகரிக்கவே மீண்டும் ராதாகிருஷ்ணனை சுகாதாரத்துறை செயலாளராகத் தமிழக அரசு நியமித்தது. அன்று முதல் தற்போது வரை மருத்துவமனைகளில் ஆய்வு, செய்வது உள்ளிட்ட தடுப்பு பணிகளைத் தீவிரமாக ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 11 மே 2021