மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

பதவி ஏற்ற புதிய எம்.எல்.ஏ.க்கள்!

பதவி ஏற்ற புதிய எம்.எல்.ஏ.க்கள்!

தமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராகக் கடந்த மே 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்நிலையில் சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில், தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளைச் சேர்ந்த புதிய எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதற்காக அனைத்து எம்எல்ஏக்களும் வெற்றி சான்றிதழ்களுடன் வந்திருந்தனர்.

முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அமைச்சர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை.

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் நின்று தேர்தலில் வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல் முறையாக எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார்.

-பிரியா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

செவ்வாய் 11 மே 2021