மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

சித்த மருத்துவ மையங்களை அதிகரிக்க உத்தரவு!

சித்த மருத்துவ மையங்களை அதிகரிக்க உத்தரவு!

சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலினால், மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால், சித்த மருத்துவம் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.

கடந்த இருதினங்களுக்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக் கல்லூரியில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். மேலும், 12 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று(மே 11) சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தக் கல்லூரியில் 140 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 70 படுக்கைகள் சித்த மருத்துவத்திற்கும், 70 படுக்கைகள் அலோபதி மருத்துவத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது 12 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் 33 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

-வினிதா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

செவ்வாய் 11 மே 2021