மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

ஞாயிற்றுக்கிழமையும் டோக்கன் வழங்கப்படும்!

ஞாயிற்றுக்கிழமையும் டோக்கன் வழங்கப்படும்!

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக் கிழமையும் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. தற்போது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின், 4 ஆயிரம் ரூபாயில் முதல்கட்டமாக 2,000 ரூபாயை இந்த மாதம் வழங்க உத்தரவிட்டார்.

இத்திட்டத்தை நேற்று முதல்வர் தொடங்கி வைத்தார். வருகிற 15ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கனை விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாளாக இன்றும் நியாய விலைக் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு நிவாரண நிதிக்கான டோக்கனை விநியோகம் செய்து வருகிறார்கள். டோக்கன் விநியோகம் செய்யும்போது, மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட கண்டிப்புடன் பணியாளர்கள் டோக்கனை விநியோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும். டோக்கன் வழங்குவதற்காக நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு 16ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமை பணி நாள் என்பதால் விடுமுறைக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

செவ்வாய் 11 மே 2021