மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

தெலங்கானாவில் 10 நாள் ஊரடங்கு!

தெலங்கானாவில் 10 நாள் ஊரடங்கு!

தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று(மே 10) முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் அளவில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கொண்டுவருவது அவசியம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் நாளை முதல் மே 22ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கின்போது கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள், தளர்வுகள், விதிவிலக்குகள் உள்ளிட்டவை குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரம் மோசமாக பாதிப்படையும். அதனால், பகுதிநேர ஊரடங்கோ, முழு ஊரடங்கோ மாநிலத்தில் அமல்படுத்தப்படாது. ஊரடங்கு அமலில் உள்ள மாநிலங்களில் நோய் தொற்று குறைந்ததாக தெரியவில்லை. அதனால், மாநிலத்தில் ஊரடங்கு என்ற பேச்சுக்கு இடமில்லை” என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,826 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் உயிரிழந்துள்ளனர். 62,797 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 11 மே 2021