மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன்: தங்கம் தென்னரசு

மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன்: தங்கம் தென்னரசு

மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த கூட்டத்தில் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் முழு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மே 11ஆம் தேதி முதல் 35 டன் ஆக்சிஜன் கிடைக்கும். இதை 70 டன் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையிடம் கேட்டிருக்கிறோம். எத்தனை நாளுக்குள் 70 டன் வழங்கப்படும் என்று 12ஆம் தேதி கூறுவதாக ஸ்டெர்லைட் தரப்பில் உறுதி அளித்திருக்கிறார்கள். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்துறையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎல், கீதா எண்டர் பிரைசஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ஆக்சிஜன் பெறவும் முயற்சிகள் நடந்து வருகிறது. தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன் உற்பத்திக்காகவும் அதைப் பெறுவதற்காகவும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.

-பிரியா

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

திங்கள் 10 மே 2021