மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

கட்சி மீது கவனம்: முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா பின்னணி!

கட்சி மீது கவனம்: முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரு எம்பிக்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்பி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் பலர் வெற்றிபெற்ற நிலையில் வைத்திலிங்கம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே அவரை மாநிலங்களவை எம்பியாக்கினார் ஜெயலலிதா. அவரது எம்பி பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிகிறது. இந்நிலையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரத்த நாட்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் வைத்திலிங்கம்.

இதேபோல கடந்த 2019 எம்பி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய கேபி. முனுசாமி மாநிலங்களவை எம்பி ஆக்கப்பட்டார். கே.பி. முனுசாமிக்கு மாநிலங்களவை எம்பி பதவிக் காலம் இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றன.

வைத்திலிங்கத்துக்கு எம்.எல்.ஏ. பதவிக் காலத்தை விட எம்பி பதவிக் காலம் மிகக் குறைவாகவே இருப்பதால் அவர் ஏற்கனவே எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருந்தார். அதேநேரம் கேபி முனுசாமிக்கு எம்பி பதவிக் காலம் இன்னும் நான்கு வருடங்கள் இருந்தபோதும் அவர் எம்.எல்.ஏ.வாக தொடரவே விரும்புகிறார். காரணம் எம்.எல்.ஏ.வாக இருந்தால்தான் மாநில அளவிலான அரசியலில் தீவிர கவனம் செலுத்த முடியும், அதிமுகவின் சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் பட்டியலிலும் இடம்பிடித்து கட்சியிலும் தன் பிடிமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று கணக்குப் போட்டிருக்கிறார் கே.பி. முனுசாமி.

வைத்திலிங்கமும், கே.பி. முனுசாமியும் அதிமுகவில் முக்கியமான இடங்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்துவதற்காகவும் எம்பி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழகத்தின் அதிமுக மாநிலங்களவை எம்பியான முகமது ஜான் அண்மையில் காலமானார். இப்போது இரு மாநிலங்களவை எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மாநிலங்களவைக்கு தமிழகத்தில் தேர்தல் நடந்தால் திமுகவே மூன்று எம்பிக்களையும் பிடிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு செயல்பட்ட அதிமுகவின் மூன்று இடங்கள் குறைந்துள்ளன. எனவே மாநிலங்களவையில் பாஜகவுக்கும் இது இழப்பாகிறது.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

திங்கள் 10 மே 2021