மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம்!

சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம்!

தமிழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

முதல்வரின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். முதல்வரின் தனிச்செயலாளரான உதயசந்திரனுக்குக் கூடுதல் பொறுப்பாகச் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜூவால், மாநகராட்சி ஆணையராக ககன்தீப்சிங் பேடி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

1. சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர்,

2.லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி

3.சென்னை காவல்துறை நிர்வாக ஏடிஜிபியாக ரவி

4.உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி

5.உளவுத்துறை டிஐஜியாக ஆசியம்மாள்

6.சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்பியாக அரவிந்தன்

7. சென்னை குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக -II எஸ்.சரவணன்

8.பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு

9. பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன்

ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

திங்கள் 10 மே 2021