மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

எழுவர் விடுதலை : முதல்வருக்கு வைகோ வலியுறுத்தல்!

எழுவர் விடுதலை : முதல்வருக்கு வைகோ வலியுறுத்தல்!

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக முதல்வராகப் பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக மதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் குரல் கொடுப்போம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

அதன்படி புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு, 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் வைகோ.

அந்த அறிக்கையில், “தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையைக் குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்குத் தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திமுக வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

திங்கள் 10 மே 2021