மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி: ஓபிஎஸ் வெளிநடப்பு!

எதிர்க்கட்சித்  தலைவர் எடப்பாடி: ஓபிஎஸ் வெளிநடப்பு!

தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்று இன்று மே 10ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவின் அதிகாரபூர்வ சமூக தளப் பக்கத்திலும் இது வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் வழக்கம்போல முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய வலியுறுத்தி ஒரு தரப்பினரும், முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தேர்வு செய்ய வலியுறுத்தி சிலரும் குரல் எழுப்பினர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் பேர் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவினாசி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான தனபாலை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்மொழிவதாக ஓ பன்னீர்செல்வம் திடீரென தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எடப்பாடி தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று வற்புறுத்தினார்கள். மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தனது எதிர்ப்பை தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற செயலகத்துக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 10 மே 2021