மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

எதிர்க்கட்சித் தலைவர்- அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓட்டுப் பெட்டி வைக்கப்படுமா?

எதிர்க்கட்சித் தலைவர்- அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓட்டுப் பெட்டி வைக்கப்படுமா?

16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் மே 11ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது. அப்போது இந்திய அரசமைப்பின் கீழ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தலைமைச் செயலக செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.

மேலும் சட்டப்பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் பேரவை துணைத் தலைவருக்கான தேர்தல் மே 12ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெற்றிபெற்ற சபாநாயகரை ஆளுங்கட்சித் தலைவரான முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்துதான் சபாநாயருக்கான இருக்கையில் அமர வைக்க வேண்டும்.

அதற்காகவாவது தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர், அதாவது அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இப்படி கட்சி ரீதியிலும் சட்டமன்ற ரீதியிலும் முக்கியமான நேரத்தில்தான் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் இன்று (மே 10) காலை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கூடுகிறது.

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கட்சி ரீதியான இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தலாமா அல்லது வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் கூட்டத்தை நடத்தலாமா என்று இருவேறு ஆலோசனைகள் நேற்று அதிமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் நடைபெற்றன.

ஆனால் நேரடியாகவே கூடிவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டு இதுகுறித்து காவல்துறையின் அனுமதியைப் பெறும் நோக்கில்... அதிமுகவின் சட்டமன்ற கட்சிக் கூட்டத்தை நடத்த அதிமுகவின் பாலகங்கா சார்பில் சென்னை மாநகர காவல்துறையிடம் நேற்று கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு வரையில் அந்தக் கடிதம் குறித்து காவல்துறையிடம் இருந்து அதிமுகவுக்கு ஏதும் பதில் இல்லை.

இந்த நிலையில் சமூக இடைவெளியோடு இந்த கூட்டத்தை சில நிமிடங்கள் மட்டுமே நடத்த வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது. ஏற்கனவே மே 7 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள், பன்னீர் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டிப் பூசல் பகிரங்கமாக வெடித்ததால் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

65 சட்டமன்ற உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தனக்கே இந்த பதவி வேண்டும் என்று இந்த முறை விடாப் பிடியாக இருக்கிறார். ஓட்டுப் பெட்டியே வைக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள் சிலர். எனவே எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதிமுகவின் சலசலப்புகள் தொடர்வது உறுதி.

வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 10 மே 2021