மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா!

புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. குறிப்பாக, திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது.

கடந்த மே 7ஆம் தேதி புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவுக்கு வந்த முதல்வருக்கு நெருக்கமாக இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால், முதல்வர் ரங்கசாமிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. இதுகுறித்து மின்னம்பலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா?என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக முதல்வருக்கு உடல் சோர்வும், வயிற்றுபோக்கும் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின்பேரில் நேற்று முன்தினம் மாலை சுகாதாரத்துறையினரை வீட்டிற்கு வரவழைத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதனுடைய முடிவு நேற்று (மே 9) மாலை வெளியானது. அதில் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிப்பு

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1,260 பேரும், காரைக்காலில் 197 பேரும், ஏனாமில் 147 பேரும், மாஹேவில் 29 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 14,034 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 56,710 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் 22 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒரு நபர், மாஹேவில் ஒருவர் என நேற்று மட்டும் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 10 மே 2021