மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

தமிழகத்தில் 29 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 29 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று(மே 9) ஒரே நாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 13,80,259ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 236 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 56 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,648 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,44,547 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 1,45,952 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 16,920 பேர் ஆண்கள், 11,977 பேர் பெண்கள்.

சென்னையில் அதிகபட்சமாக 7130 பேருக்கும், செங்கல்பட்டில் 2279 பேரும், கோவையில் 2509 பேரும், மதுரையில் 1068 பேரும், திருவள்ளூரில் 1768 பேரும், காஞ்சிபுரத்தில் 1089 பேரும், தூத்துக்குடி 884 பேரும், தஞ்சையில் 897 பேரும், திருச்சியில் 813 பேரும், சேலத்தில் 639 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், அதற்கு பின்பு, தொற்று பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

ஞாயிறு 9 மே 2021