மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

மே 24க்கு பிறகும் ஊரடங்கா?

மே 24க்கு பிறகும் ஊரடங்கா?

தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நிலை வராது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தொழில்துறையினர் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும், தொழில்துறையினர் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை வராது. ஒருவேளை மறுபடியும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் உருவானால் தொழில் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,” ஊரடங்கை அமல்படுத்த தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று பரவல் சங்கிலி அறுபடுவதில்தான் ஊரடங்கின் வெற்றி அடங்கி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

ஞாயிறு 9 மே 2021