மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

முதல்வருக்கு பிரசாதம் வழங்கிய திருப்பதி தேவஸ்தானம்!

முதல்வருக்கு  பிரசாதம் வழங்கிய திருப்பதி தேவஸ்தானம்!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 7ஆம் தேதி பதவி ஏற்றார். தேர்தலுக்கு முன் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக, அவரது மனைவி துர்கா, பல கோவில்களுக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதையும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில், வேத பண்டிதர்கள் ஸ்டாலின் வீட்டுக்கு வந்தனர்.

அங்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வேத பண்டிதர்கள் வழங்கினர்.

-பிரியா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

ஞாயிறு 9 மே 2021