மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு!

பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு!

பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்றது. நெல்லை தொகுதியில் போட்டியிட்டு நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவரைத் தேர்ந்தெடுக்க தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கிஷன் ரெட்டி , புதிதாக தேர்வான சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எல்.முருகன் பேசுகையில், “தமிழக பாஜக வரலாற்றில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக மலரவே முடியாது, பாஜகவுக்கு இடமே இல்லை என்று சொன்னவர்களின் முகத்தில் கரியை பூசும் வகையில் இங்கு தாமரை மலர்ந்திருக்கிறது.

சட்டமன்றத்தைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களாக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள். அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை அவர்கள் வழங்குவார்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தயங்கமாட்டார்கள். தமிழர்களின் வளர்ச்சிக்காகவும் தமிழ் மொழிக்காகவும் குரல் கொடுப்பார்கள். எங்கள் பணி சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேவும் தொடரும்” என்று தெரிவித்தார்.

கிஷன் ரெட்டி பேசுகையில், “இந்நேரத்தில் தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் தமிழகத்தில் பாஜகவின் அடித்தளத்தை உறுதியாக்கப் பாடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.

-பிரியா

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

ஞாயிறு 9 மே 2021