மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

கொரோனா பணியிலிருந்து கர்ப்பிணிகளுக்கு விலக்கு!

கொரோனா பணியிலிருந்து கர்ப்பிணிகளுக்கு விலக்கு!

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சண்முகப்பிரியா, 8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும், மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொற்று தீவிரம் காரணமாக நேற்று மாலை மருத்துவர் சண்முகப்பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கர்ப்பிணிகள் மற்றும் இணைநோய் உள்ளவர்களை முன்கள பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்திட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என அம்மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா பனியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

ஞாயிறு 9 மே 2021