uகொரோனா தடுப்பு நிதி: தமிழகத்துக்கு எவ்வளவு?

politics

தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கொரோனா தடுப்பு நிதியாக ரூ. 8923.8 கோடியை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்திருக்கிறது. இதில் தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, கொரோனா தடுப்பு நிதியின் முதல் தவணை 2021 ஜூன் மாதம் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுவதாக இருந்தது. எனினும் கொவிட்-19 பெருந்தொற்றின் பரவல் அதிகரிப்பு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட முன்கூட்டியே உதவித்தொகையை விடுவிக்க நிதியமைச்சகம் முடிவு செய்து, இந்த தொகை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.1441.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவுக்கு ரூ.861.4 கோடியும், பீகாருக்கு ரூ.741.8 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.533.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *