மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர்!

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர்!

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, அதிகார மட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உததரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்து அனுபவம் பெற்றதால் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வேளாண் துறை செயலாளராக இருந்தபோது கஜா,நிவர்,புரேவி உள்ளிட்ட தமிழ்நாட்டின் புயல் பாதிப்புகளின் போது களப்பணியாற்றி பாராட்டு பெற்றவர். பிரதமர் விவசாய திட்டத்தில் தமிழ்நாட்டில் முறைகேடு நடந்த போது அதை தீவிரமாக விசாரித்தவர். கடலூர் மாவட்ட ஆட்சியராகவும் இருந்துள்ளார். ஊரக வளர்ச்சி துறையிலும் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் நியமனம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

பேரிடர் மேலாண்மையில் நீண்ட அனுபவம் கொண்ட ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் அவர்களின் நடவடிக்கைகளால் சென்னையில் தீவிரமாக இருக்கும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 9 மே 2021