மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

அரசுத் துறைகளை ஒருங்கிணையுங்கள்: அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் உத்தரவு!

அரசுத் துறைகளை ஒருங்கிணையுங்கள்: அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் உத்தரவு!

தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று (மே 9) காலை 11.30 முதல் பகல் 1 மணிக்கும் மேல் வரை சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தவிர மீதி அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தமிழகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியே அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கியமான சில வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் அமைச்சர்களுக்குப் பிறப்பித்துள்ளார்.

“தமிழக மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் முறையாக பயன்படுத்தப்படுவதை அமைச்சர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உறுதி செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜன் வீண் போகக் கூடாது என்பதை உணர்ந்து அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு முழுமையாக மக்களால் அமல்படுத்தப் பட்டால் மட்டுமே நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த முழு ஒத்துழைப்பை ஏற்கவேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தின் முக்கியமான நகரங்களிலும் அரசு விற்பனை செய்து வருகிறது. இம்மருந்து தேவைப்படுபவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதோடு, இம்மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்.

தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய அரசு துறைகள் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் போராட வேண்டும். அமைச்சர்கள் அனைவரும் இத்துறைகளை ஒருங்கிணைத்து ஆங்காங்கே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

‘-வேந்தன்

.

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

ஞாயிறு 9 மே 2021