மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

கொரோனா வார் ரூம்: ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

கொரோனா வார் ரூம்: ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மருத்துவமனைகளில் ஆய்வு, முழு ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழகத்தில், “'மருத்துவ அவசர நிலை' என்று சொல்லக்கூடிய அளவுக்கு கொரோனா தீவிரம் இருப்பதால் அவசரமாக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) ஒன்றை உடனடியாகத் திறக்க கூறியுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை ஆகியவற்றை அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வார் ரூம் அமைக்கப்பட்டு, அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், உமா ஐஏஎஸ், எஸ்.வினீத், கே.பி. கார்த்திகேயன், அழகுமீனா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 104 என்ற ஹெல்த் ஹெல்ப்லைன் எண் மூலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கையின் எண்ணிக்கைகள் அனைத்தும் கட்டளை மையத்தின் மூலம் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

ஞாயிறு 9 மே 2021