மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

மீண்டும் சென்னையை காலி செய்யும் மக்கள்!

மீண்டும் சென்னையை காலி செய்யும் மக்கள்!

நேற்று முதல் இன்று காலை வரை சென்னையில் இருந்து 3,325 பேருந்துகள் மூலம் 1.33 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாளை முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, எந்தவித போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி வேலை பார்க்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை முதலே தங்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்ய ஏதுவாக, நேற்றும் இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையிலிருந்து 3,325 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்மூலம் 1.33. லட்சம் பேர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதுபோன்று இன்றும் 4,816 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம், அரசு, தனியார் பேருந்துகளை எதிர்பார்க்கமால், பெரும்பாலானோர் தங்களின் இருசக்கர வாகனங்களிலேயே குடும்பத்துடன் சொந்த ஊர்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தேவையான துணி மூட்டைகளுடன், குழந்தைகளையும் வைத்து கொண்டு செல்லும் பலரை காண முடிகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, சென்னையை விட்டுச் சென்ற பலரும் திரும்பி வராத நிலையில், மீண்டும் ஊரடங்கு காரணமாக மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர்.

-வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 9 மே 2021