மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

அசன் முகமது ஜின்னாவுக்கு முக்கியப் பதவி!

அசன் முகமது ஜின்னாவுக்கு முக்கியப் பதவி!

திமுக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து பல்வேறு அரசுப் பதவிகளுக்கு புதிய ஆளுமைகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த வகையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நேற்று (மே 7) நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து பல்வேறு சட்ட பதவிகளுக்கான நியமனங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளன. யார் யாருக்கு என்ன பதவி கிடைக்கும் என்று திமுகவின் சட்டத்துறை வட்டாரத்திலும் நீதித்துறை வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே தமிழக அரசின் மாநில தலைமைக் குற்றவியல் அரசு வழக்கறிஞராக திமுகவின் தற்போதைய இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே நெருக்கமான அசன் முகமது ஜின்னா சட்டத் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஆயிரம் விளக்கில் தொடர்ந்து ஜெயித்து வந்த மு. க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு மாறியபோது தனது ஆயிரம் விளக்கு தொகுதியில் அசன் முகமது ஜின்னாவைதான் நிறுத்தினார். அந்தத் தேர்தலில் ஜின்னா வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனபோதும் ஸ்டாலினுடனான நெருங்கிய வளையத்தில் ஜின்னா முக்கியமானவராக இருந்தார்.

திமுகவின் இளைஞரணி துணை செயலாளராக இருக்கும் ஜின்னா மிகப் பிரபலமான மாணவி சரிகா ஷா ஈவ்டீசிங் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர்.

ஸ்டாலினுடன் நெருக்கமானது போலவே திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மிகவும் நெருக்கமானவர் அசன் முகமது ஜின்னா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிட்ட போது அவரது நம்பிக்கைக்குரிய தலைமை முகவராக செயல்பட்டது ஜின்னா தான்.

இவ்வாறு அரசியல் ரீதியிலும் சட்ட ரீதியிலும் திமுகவின் முக்கியமான இடத்தில் இருக்கும் அசன் முகமது ஜின்னா தமிழக அரசின் மாநில தலைமைக் குற்றவியல் அரசு வழக்கறிஞராக விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார் என்கிறார்கள் திமுக தலைமைக்கு நெருக்க மானவர்கள்.

வேந்தன்

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

ஞாயிறு 9 மே 2021