மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

முதல்வரின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு!

முதல்வரின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு!

தமிழகத்துக்குக் கூடுதலாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான ஆக்சிஜன் அளவை 419 டன்னாக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.

கொரோனா பரவி வரும் நிலையில், வடமாநிலங்கள் போன்று தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், மாநிலத்தில் தினசரி ஆக்சிஜன் நுகர்வு என்பது 440 மெட்ரிக் டன் ஆக உள்ள நிலையில், 220 மெட்ரிக் டன் மட்டுமே தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்த அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும் நேற்று (மே 8) கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு என 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

அப்போதும், தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் அளவை உயர்த்த வேண்டும். ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

அதை உடனடியாகப் பரிசீலிப்பதாகப் பிரதமர் மோடியும் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் உற்பத்தி மையத்திலிருந்து நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது 140 மெட்ரிக் டன்னாகவும், சேலம் ஜிண்டால் உருக்கு ஆலையிலிருந்து 10 டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்ட நிலையில் அது 15 டன் ஆகவும், தஞ்சாவூர் சிக்ஜில்சோல் ஆலையிலிருந்து 20 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்ட நிலையில் அது 40 டன் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு ஆலைகளிலிருந்து வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை உயர்த்தி, தமிழகத்துக்கு 419 டன் ஆக்சிஜன் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

ஞாயிறு 9 மே 2021