மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

கொரோனாவால் கர்ப்பிணி மருத்துவர் பலி: முதல்வர் இரங்கல்!

கொரோனாவால் கர்ப்பிணி மருத்துவர் பலி: முதல்வர்  இரங்கல்!

மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனாவால் உயிரிழந்திருப்பது வேதனையளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு சாமானிய மக்கள் முதல் மருத்துவர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் பலியாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்து களப்பணியாற்றி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் சண்முகப்பிரியா (32) என்ற 8 மாத கர்ப்பிணி மருத்துவர் பணியாற்றி வந்தார். கர்ப்பிணியாக இருந்தாலும், இந்த நெருக்கடியான பெருந்தொற்று காலத்திலும் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து தன்னுடைய பணியை செய்து வந்தார். இந்த நிலையில்,மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த செய்தி மருத்துவர்கள் வட்டாரத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில். “மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முன்களப்பணி வீரராக - அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணி ஆற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.

மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன்.

மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சண்முகப்பிரியா மறைவுக்கு மருத்துவர் சமூகம் உள்பட பொதுமக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஞாயிறு 9 மே 2021