மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

புதிய உச்சத்தை அடையும் கொரோனா உயிரிழப்புகள்!

புதிய உச்சத்தை அடையும் கொரோனா உயிரிழப்புகள்!

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 241 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டி செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10ஆம் தேதி முதல் 14 நாட்கள் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27,397பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 13,51,362ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 16,101 பேர் ஆண்கள், 11,296 பேர் பெண்கள்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 15,412 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 23,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,39,401 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 6,846 பேரும், செங்கல்பட்டில் 2458 பேரும், கோவையில் 2117 பேரும், மதுரையில் 1217 பேரும், திருவள்ளூரில் 1284 பேரும், காஞ்சிபுரத்தில் 906 பேரும், தூத்துக்குடி 853 பேரும், தஞ்சையில் 857 பேரும், திருச்சியில் 820 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 8 மே 2021