மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

அவையை நடத்தப் போகும் அண்ணாச்சி- எதிர்பார்ப்பில் நெல்லை

அவையை நடத்தப் போகும் அண்ணாச்சி- எதிர்பார்ப்பில் நெல்லை

புதிதாக தேர்வாகியிருக்கும் 16 ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் மே 11 ஆம் தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே கடந்த 15 ஆவது சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடர்கள் நடந்த கலைவாணர் அரங்கிலேயே சமூக இடைவெளியோடு புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரும் நடைபெற இருக்கிறது.

அன்று முழுதும் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைக்கும் நிகழ்வு நடைபெறும். தற்காலிக சபாநாயகராக திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியேற்பு செய்து வைப்பார்.

மே 12 ஆம் தேதி சட்டமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான, துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என்று சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அறிவித்திருக்கிறார்.

16ஆவது சட்டமன்றத்தின் சபாநாயகர் யார் என்ற கேள்வி இப்போது அரசியல் அரங்கில் விவாதமாகியுள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரநிதித்துவம் இல்லையென்று சர்ச்சை வெடித்த நிலையில் நேற்று இரவே டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியனுக்கு தமிழக அரசின் தலைமை கொறடா பதவி அளிக்கப்பட்டது. எனவே டெல்டா மாவட்டங்களுக்கு சபாநாயகர் பதவி என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அடுத்து நெல்லை மாவட்டத்துக்கு தமிழக அமைச்சரவையில் பிரநிதித்துவம் இல்லாததால் அம்மாவட்டத்தைச் சேர்ந்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவுவை சபாநாயகராக திமுக முன்னிறுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆளுங்கட்சியின் மேல் மட்ட வட்டாரங்களும், நெல்லை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

அப்பாவு சபாநாயகர், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி என்பதாக 16ஆவது சட்டமன்றம் அமையலாம்.

அண்ணாச்சிதான் அவையை நடத்தப் போறாராம்லே...என்ற குஷியான உரையாடல்கள் நெல்லை திமுக வட்டாரத்தில் தொடங்கிவிட்டன.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

சனி 8 மே 2021