மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: அபராதமும், சிறையும்!

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: அபராதமும், சிறையும்!

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் அபராதமும், ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. அதனால், பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், சென்னை போன்ற நகரங்களில் தங்கி இருப்பவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு வசதியாக இன்றும் நாளையும் முழு நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்தது.

முழுதாக இரண்டு நாட்கள் கூட இல்லாததால், மக்கள் கிடைக்கும் பேருந்துகளில் ஏறி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192A-ன் கீழ் விதிகளை மீறிய குற்றத்திற்காக ரூ.10,000 அபராதம் மற்றும் ஆறுமாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 207ன் கீழ் வாகனம் சிறை பிடிக்கப்பட்டு, தமிழ்நாடு மோட்டர் வாகன விதி 421ன்கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டு, வழக்கு தொடரப்படும்.

எனவே, தனியார் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், இந்த பேரிடர் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு, முறையான கட்டணத்தை மட்டும் வசூலித்து வாகனங்களை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

சனி 8 மே 2021