மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

கட்டபஞ்சாயத்து: எச்சரிக்கும் சங்கர் ஜிவால்

கட்டபஞ்சாயத்து: எச்சரிக்கும் சங்கர் ஜிவால்

கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் போன்றவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிகார மட்டத்திலும் மாற்றங்கள் அடுத்தடுத்து அதிரடியாக நடந்து கொண்டிருக்கின்றன. மே 7ஆம் தேதி காலையில் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, மதியம் தனி செயலர்கள் நியமிக்கப்பட்டனர். மாலையில் தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார்.

இரவில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த மகேஷ் அகர்வால் இடமாற்றப்பட்டு, சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக காவல்துறை பணியில் சேர்ந்தார் சங்கர் ஜிவால். சேலம்,மதுரை எஸ்பியாகவும், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் மத்திய அரசு பணியில் 8 ஆண்டும், திருச்சி காவல் ஆணையராகவும், ஐஜி உளவுத்துறை, ஏடிஜிபி சிறப்பு காவல் படை என முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று முறைப்படி சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்ற சங்கர் ஜிவால் இன்று(மே 8) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தற்போதைய சூழலில் கொரோனாவுக்கு எதிராகக் காவலர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் செயல்படுகிறார்கள். அடுத்தக்கட்டமாக, முதல்வரின் சிறந்த ஆட்சிக்கு உதவும் வகையில் செயல்படுவோம்.

காவலர்களுக்கு போதிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட போதிலும், காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்து வருவது வருத்தமளிக்கிறது. கொரோனாவை எதிர்த்து முன்களப் பணியாளர்களாக போராடி வரும் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். ரெம்டெசிவிர் கள்ளச் சந்தை விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற குற்றங்களை கண்காணிக்க உளவுத்துறை மூலம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும்போது பொதுமக்கள் ஆன்லைன் மூலம் தாராளமாக புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 8 மே 2021