மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

180 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை!

180 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை!

நாட்டில் உள்ள 180 மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களாக கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மூன்றாவது நாளாக தொடர்ந்து 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,187 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 37,23,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தொற்றால் மக்கள் உயிரிழந்து வருகையில், மறு பக்கம் ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” கடந்த ஏழு நாட்களாக 180 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட புதிதாக தொற்று ஏற்படவில்லை. கடந்த 14 நாட்களில் 18 மாவட்டங்களில் எந்த தொற்றும் ஏற்படவில்லை. கடந்த 21 நாட்களில் 54 மாவட்டங்களிலும் எந்தவொரு புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

சனி 8 மே 2021