மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

அரசுடன் இணைந்து செயல்படுவோம்: குஷ்பு

அரசுடன் இணைந்து செயல்படுவோம்: குஷ்பு

சினிமா, அரசியல் இவை இரண்டிலும் குஷ்பு சுதந்திரமாகக் கருத்துகளை வெளியிட கூடிய சுபாவம் உள்ளவர். சங்க கட்டுப்பாடு, கட்சி கட்டுப்பாடு என கட்டுப்பட்டு இருக்கக்கூடியவரல்ல நடிகை குஷ்பு. அதனால் தான் திமுக, அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் இரண்டு கட்சிகளிலும் அவரால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். எல்லா திரையுலக பிரபலங்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து கூறி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக மேளனமாக இருந்த குஷ்பு, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை நேரடியாக வரவேற்காமல் மறைமுகமாக ஆதரிக்கும் தொனியில், “அரசுடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்” என்று குஷ்பு கூறியிருக்கிறார்.

இது சம்பந்தமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயல்பட வேண்டும் கொரோனாவுக்கு எதிரான போரில் அரசாங்கம் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும், ஒத்துழைப்பும் முக்கியமானது. நாம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம் சிறு துளி பெருவெள்ளமாகும்” என்று கும்பிட்ட கை போட்ட ஸ்மைலியுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

-இராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 8 மே 2021