மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

கைமீறி செல்லும் கொரோனா: விழி பிதுங்கும் கர்நாடாகா!

கைமீறி செல்லும் கொரோனா: விழி பிதுங்கும் கர்நாடாகா!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 592 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,01,078 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,18,92,676ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 24 மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று 15 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. மேலும், 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்பில் 25 சதவிகித பாதிப்பு, பெங்களூரு, புனே, டெல்லி, அகமதாபாத், எர்ணாகுளம், நாக்பூர், மும்பை, கோழிக்கோடு, ஜெய்ப்பூர் மற்றும் தானே, ஆகிய 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு மாவட்டம் தான் முதல் இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடாகவில் நேற்று ஒரே நாளில் 48,781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 18,38,885 ஆக அதிகரித்துள்ளது. புதிய உச்சமாக ஒரே நாளில் 592 பேர் உயிரிழந்தனர்.

மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,804 ஆக உயர்ந்துள்ளது. 28, 623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் 5,36,641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக பெங்களூருவில் ஒரே நாளில் 21,376 பேருக்கும், பாகல்கோட்டையில் 661 பேருக்கும், பல்லாரியில் 1,284 பேருக்கும், பெலகாவியில் 965 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் நேற்று உயிரிழந்த 592 பேரில், 346 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள்.

பெங்களூருவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 68 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த எண்ணிக்கை 1,014 ஆக உயர்ந்துள்ளது. 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 42 பேர் சிகிச்சையில் உள்ளனர். 752 பேர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று கர்நாடகாவிலும் தற்போது கொரோனா தொற்றினால் விழி பிதுங்கி கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், உடல்களை எரிக்க போதிய இடம் இல்லாமல் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநிலத்தில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தைத் நெருங்கியுள்ளதால், நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கைமீறி சென்று கொண்டிருக்கும் நிலைமையை ஓரளவு சமாளிக்கும் வகையில், கர்நாடகாவில் மே 10 தேதி முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 14 நாட்கள் அனைத்து தளர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி வரை மட்டுமே அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசர சிகிச்சை வாகனங்களை தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 8 மே 2021