மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

திமுக ஆட்சி: முக்கிய போலீஸ் அதிகாரிகள் மாற்றம்!

திமுக ஆட்சி: முக்கிய போலீஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகத்தில் புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்ற நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வழக்கம்போல முதல்வர் ஸ்டாலினிடமே போலீஸ் துறை இருக்கிறது.

ஆட்சி மாறும்போதெல்லாம் முக்கியப் பொறுப்பிலுள்ள ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது இயல்பாகிவிட்டது. அந்த வகையில் புதிய போலீஸ் உயரதிகாரிகள் இப்போது நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த மே 6ஆம் தேதி மின்னம்பலத்தில், காவல் துறையிலும் உடனடி மாற்றங்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

டேவிட்சன்-சங்கர்ஜிவால்- ரவி : கலக்கப்போகும் மூன்று அதிகாரிகள்! என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், முதல்வர் ஸ்டாலின் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத்துறை உயர் அதிகாரியாக நியமிக்க உள்ளதாகவும், சென்னை மாநகர ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

சனி 8 மே 2021