மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

ஆக்சிஜன்: மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ஆக்சிஜன்: மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்துக்குத் தேவையான கூடுதல் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நெருக்கடியான சூழ்நிலையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். பொறுப்பேற்றதும் கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார். நேற்று மாலை, கொரோனா பரவல் தடுப்பு மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்துக்குத் தேவையான ஆக்ஸிஜனை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். பிரதமருக்கு முதல்வராக ஸ்டாலின் எழுதும் முதல் கடிதம் இதுவாகும்.

அந்தக் கடிதத்தில், “வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், மாநிலத்தில் ஆக்சிஜன் கையிருப்பில் கடுமையான நெருக்கடி நிலவி வருகிறது.

மாநிலத்தில் தினசரி ஆக்சிஜன் நுகர்வு என்பது 440 மெட்ரிக் டன் ஆக உள்ளது. இந்த அளவு அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. அதன்படி தமிழகத்தின் மொத்த தேவையானது 840 மெட்ரிக் டன் ஆக இருக்கும்.

ஆனால் தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என எங்களது அதிகாரிகள், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுடன் கடந்த மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தையில் கூறியிருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் 476 மெட்ரிக் டன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இது உத்தரவாக இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஐநாக்ஸ், கேரள மாநிலம் காஞ்சிகோடு ஆகிய பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு அடுத்த நான்கு நாட்களுக்குக் குறைந்தபட்சம் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படும்.

ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளிலிருந்து 60 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டு இதில் 20 மெட்ரிக் டன் 2 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும்.

கூடுதலான ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய 120 மெட்ரிக் டன் செயில் மற்றும் லிண்டே அலைகளிலிருந்து வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

எனினும் இந்தத் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டிற்கு உத்தரவு வழங்கப்படாததால் இன்னும் காத்திருப்பில் உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு கடும் சிக்கலான நிலையை எட்டியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

எனவே இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும்.

தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டுவருவதற்குக் குறைந்தபட்சம் 20 ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் அதனைக் கொண்டு வர ரயில்களை வழங்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 8 மே 2021