மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

படுக்கை விவரங்களை அறிய இணையதள வசதி!

படுக்கை விவரங்களை அறிய இணையதள வசதி!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை தெரிந்துக் கொள்ள இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 15,525 பேர் ஆண்கள், 10,940 பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 6738 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதிய உச்சமாக தமிழகத்தில் கொரோனாவால் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

இப்படி கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக 50 சதவிகித படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், கல்லூரிகள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி கூடுதல் படுக்கை வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை தெரிந்து கொள்ள இணையதளவசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை அறிந்து கொள்ள tncovidbeds என்ற இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

சனி 8 மே 2021