மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 மே 2021

கோவின் போர்ட்டலில் புதிய அம்சம்!

கோவின் போர்ட்டலில் புதிய அம்சம்!

தடுப்பூசி முன்பதிவு குளறுபடிகளை தவிர்க்க, கோவின் இணையதளத்தில், நான்கு இலக்க ரகசிய எண்ணுடன் கூடிய பாதுகாப்பு வசதி, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 18-44 வயதுடையோர் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு முன்பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஒருசில மாநிலங்களே அந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கோவின் இணையதளத்தில், கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்த சிலர், தடுப்பூசி போட்டு கொள்ளாமலே , தடுப்பூசி போட்டு விட்டதாக, செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த தவறு, கணினியில் பதிவு செய்யும் ஊழியர்களின் கவனக்குறைவால் நடந்துள்ளதாக தெரிகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில், கோவின் இணையதளத்தில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வோருக்கு இன்று(மே 8) முதல் 4 இலக்க ரகசிய பாதுகாப்பு எண் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன்படி,தடுப்பூசி போட முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த 4 இலக்க எண் கொடுக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள மருத்துவமனைக்கு செல்லும்போது, அங்குள்ள ஊழியர்கள் 4 இலக்க பாதுகாப்பு எண்ணை கேட்பார்கள். அந்த எண்ணை பயனர்கள் தெரிவிக்க வேண்டும். அந்த எண்ணை பதிவு செய்த பின்னரே, பயனர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பபடும்.

தடுப்பூசி போடச் செல்லும் போது, பதிவு செய்யப்பட்ட செல்போனிற்கு வந்த உறுதிப்படுத்தும் குறுந்தகவலை காண்பிக்க வேண்டும். பாதுகாப்பு குறியீட்டைக் கொண்டு தடுப்பூசி தொடர்பான பதிவு புதுப்பிக்கப்பட்ட பின்னரே டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்படும் என்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பாதுகாப்பு குறியீட்டு எண்ணை வழங்க வேண்டும். இதன்மூலம் பிழைகள், குளறுபடிகள் எதுவும் நடக்காமல் தவிர்க்க முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 8 மே 2021