மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

எதிர்க்கட்சித் தலைவர் யார்? அதிமுகவுக்குள் காரசார மோதல்!

எதிர்க்கட்சித் தலைவர் யார்? அதிமுகவுக்குள் காரசார மோதல்!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் இன்று (மே 7) மாலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் அந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இன்று காலைதான் அவர் சேலத்தில் இருந்தே சென்னைக்குப் புறப்பட்டார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதோடு, அதன் பின்னர் நடந்த விருந்தில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்டோரோடு ஒரே மேஜையைப் பகிர்ந்துகொண்டார். இந்தக் காட்சியைப் பார்த்த அதிமுகவினர், “இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று முடிவு செய்யப்படும் நிலையில் இந்த படத்தைப் பார்த்தால் ஓபிஎஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் போல தெரிகிறது” என்று தகவல்களைப் பரப்பினார்கள்.

இந்த நிலையில்தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, தோற்றுப்போன வேட்பாளர்களும் நிர்வாகிகளும் கூட வந்திருந்தனர்.

அதிமுக தலைமை அலுவலக வாசலிலேயே ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. ஓபிஎஸ் கார் நிறுத்த இடமில்லை என்று சிலர் போர்க்கொடி தூக்கினார்கள்.

அதன் பின்னர் கூட்டம் தொடங்கியிருக்கிறது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் நம்மிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள், “தேர்தலில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் எடப்பாடிதான் என்று பிரச்சினையைக் கிளப்பத் திட்டமிட்டுள்ளோம். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஓபிஎஸ் சுக்குதான் என்றும் அவர்களை வலியுறுத்துவோம். எத்தனை நாள்தான் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பது?” என்று கேள்வி கேட்டனர்.

கூட்டம் காரசாரமாக நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

-வேந்தன்

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வெள்ளி 7 மே 2021