மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தமா?: உதயநிதி

அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தமா?: உதயநிதி

அமைச்சரவையில் இடம் கிடைக்காதது குறித்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று (மே 7) நடைபெற்றது. மொத்தம் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனிடையே திமுகவில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், “உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றால் முக்கிய துறையைக் கொடுத்தால்தான் சரியாக இருக்கும். இப்போதே சீனியர்கள் பலர் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே இன்னும் சில மாதங்களிலோ, ஓராண்டிலோ, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது உதயநிதிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தனர். இதுகுறித்து மின்னம்பலத்தில், ஓராண்டில் அமைச்சராகிறார் உதயநிதி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி , “மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தருணம். தமிழ்நாட்டுக்குத் தேவையான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. எங்கள் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுகவினர் மக்களுக்கான பணியை ஆற்றுவார்கள்" எனத் தெரிவித்தார்.

அப்போது, அவரிடம் அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறதா என, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கிறதா? எனக்கு இல்லை" என கூறினார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 7 மே 2021