மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

அதிமுக ஆட்சி குறித்து வெள்ளை அறிக்கை: நிதியமைச்சர் தியாகராஜன்

அதிமுக ஆட்சி குறித்து வெள்ளை அறிக்கை: நிதியமைச்சர் தியாகராஜன்

முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். இதன்பின் பேட்டியளித்த பழனிவேல் தியாகராஜன், “முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

கடன்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, எவ்வளவு வட்டி இதுவரை வழங்கப்பட்டது போன்ற விஷயங்கள் வெளியிடப்படும். கடந்த ஆட்சியில் கடனுக்கும் செலவுக்கும் கணக்கு ஒத்துப்போகவில்லை. ஒரு காலத்தில் உற்பத்தியில் 10 முதல் 10.5 சதவீதம் வரை வருமானம் ஈட்டிய தமிழகம் இன்று 6.5 சதவீதமாக மாறியது எப்படி? உள்ளிட்ட பல கேள்விகள் இருக்கின்றன என்று தெரிவித்தார்.

அதுபோன்று, எல்லாவற்றையும் தாண்டி கொரோனாவில் இருந்து தமிழகத்தை மீட்பதே அரசின் முதல் இலக்கு. ஆக்சிஜன், தடுப்பூசி ஏற்பாடு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளது. அதற்கேற்ற வகையில் நிதி ஏற்பாடு செய்வது எனது கடமை என்றும் கூறினார்.

-பிரியா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வெள்ளி 7 மே 2021