மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை!

காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்க ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை மட்டுமில்லாமல், உயிரிழப்பையும் அதிகளவில் ஏற்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் தொடங்கி அனைவரையும் பாதித்து வருகிறது இந்தகொரோனா. இதற்கு காவலர்களும் விதிவிலக்கு அல்ல. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு முகக்கவசம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பிபிஇ கிட் என்றழைக்கப்படும் பாதுகாப்பு கவச உடை, கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அரசே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

-வினிதா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வெள்ளி 7 மே 2021