மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

நூறு நாட்களுக்குள் தீர்வு: ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

நூறு நாட்களுக்குள் தீர்வு: ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்திற்கான துறைக்கு ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.

தமிழக முதல்வராக பதவியேற்றவுடன் தலைமை செயலகத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டபடி, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், மக்களின் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண துறை உருவாக்கப்பட்டு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், “முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களுக்குள் ஆய்வு செய்து, கோரிக்கைகளை நிறைவேற்றிட புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த துறைக்கு ஐஏஎஸ் அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷில்பா பிரபாகர் சதீஷ், 2010ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். பின்பு, வேலூர் சார் ஆட்சியர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு மே மாதம் திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக பொறுப்பேற்றார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 7 மே 2021