மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

ஸ்டாலினை சந்திக்கும் அழகிரி: இதயம் இனித்தது 2.0

ஸ்டாலினை சந்திக்கும் அழகிரி: இதயம் இனித்தது 2.0

திமுகவில் இருந்து 2014 ஆம் ஆண்டு நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரிக்கும் அவரது தம்பி மு.க.ஸ்டாலினுக்குமான யுத்தத்தை திமுகவின் தேர்தல் வெற்றி முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய மு.க. அழகிரி, “ஸ்டாலின் நிச்சயமாக முதல்வர் பதவிக்கு வர முடியாது”என்று அடித்துக் கூறினார்.

அந்த கூட்டத்தில் ஆதரவாளர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையே பேசிய மு.க. அழகிரி “ தி.மு.க.வில் நடந்த உட்கட்சி தேர்தல் முறைகேடுகளைப் பற்றி கலைஞரிடம் புகார் கூறினேன். அந்த சமயத்தில் கட்சி பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது எனது ஆதரவாளர்கள் பொதுக்குழுவே வருக என்று என்று போஸ்டர் அடித்தனர். உடனே அந்த நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கினர். கட்சியினர் போஸ்டர் அடித்தது ஒரு தவறா? ஏன் ஸ்டாலினுக்கு கூட கருணாநிதி இருக்கும் போதே வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடித்தனர். ஸ்டாலின் என்றுமே முதல்-அமைச்சர் ஆக முடியாது. என்னுடைய ஆதரவாளர்கள் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக விட மாட்டார்கள்” என்று பேசினார்.

ஸ்டாலின் மீதான அழகிரியின் மிகக் கடுமையான அந்தத் தாக்குதலை அழகிரியுடன் இருக்கும் அவரது முக்கிய ஆதராவளர்கள் கூட விரும்பவில்லை. எனினும் இதற்கு பதில் தர வேண்டும் என்று திமுகவினர் அப்போது ஸ்டாலினிடம் கேட்டபோது, “வேண்டாம் அவருக்கு யாரும் பதில் தர வேண்டாம்” என்று உத்தரவிட்டார் ஸ்டாலின்.

மு.க. அழகிரி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், அவரோடு சேர்ந்து அரசியல் செய்யலாம் என்று நம்பியிருந்தார் அழகிரி. ஆனால் திடீரென ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்துவிட்டதால் அமைதியாகிவிட்டார்.

இடையே, ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆளுமைகள் ஒவ்வொருவர் பற்றியும் ஒவ்வொரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டும் என்ற வகையில், ‘அழகிரி’யைப் பற்றி அண்ணன் என்று சட்டென சொன்னார் ஸ்டாலின்.

தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு எந்த சிக்னலும் கொடுக்காமல் இருந்த அழகிரி தேர்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, “முதல்வராகும் திமுக தலைவர் என் தம்பிக்கு வாழ்த்துகள். அவர் நல்லாட்சி தருவார்”என்று ஆச்சரியமான கருத்தை வெளிப்படுத்தினார். அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அழகிரி சார்பாக அவரது மகன் துரை தயாநிதி வர, அவரை கட்டிப்பிடித்து வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின். இதை வரவேற்கும் வகையில் மதுரை அழகிரி ஆதரவாளர்கள் இணைந்த இதயங்களே என்று போஸ்டர்களையும் இன்று மதுரை முழுதும் ஒட்டியுள்ளனர்.

“பதவியேற்பு விழாவுக்கு தனது மகனை அனுப்பிய அழகிரி, விரைவில் சித்தரஞ்சன் சாலை வீட்டுக்குச் சென்று தம்பியான முதல்வர் ஸ்டாலினை வாழ்த்த திட்டமிட்டிருக்கிறார் . அப்போது கண்கள் பனித்தது இதயம் இனித்தது 2.0 அரங்கேறும்”என்கிறார்கள் மதுரை அரசியல் அறிந்தவர்கள்.

-வேந்தன்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வெள்ளி 7 மே 2021