மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர்!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர்!

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். முதல் நாளிலே புதிய தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பதவியேற்பைத் தொடர்ந்து, தலைமைசெயலகத்தில் வைத்து ஐந்து முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உதயசந்திரன் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இறையன்பு ஐஏஎஸ் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். 2019 ஆம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித்துறை தலைவராக இருந்து வருகிறார்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 7 மே 2021