மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

ஒருமணி நேரம் நின்றும் அசராத ஆளுநர்

ஒருமணி நேரம் நின்றும்  அசராத ஆளுநர்

ஆளுநர் மாளிகையில் இன்று (மே 7) காலை 9 மணிக்கு தொடங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பதவியேற்பு விழா சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, 34 ஆவது அமைச்சராக கயல்விழி செல்வராஜ் வரை மொத்தம் 34 பேருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

முதலில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியேற்பு, ரகசிய காப்பு உறுதிமொழி செய்துவைப்பதற்காக தனது இருக்கையில் இருந்து எழுந்தார் ஆளுநர் பன்வாரிலால். பதவியேற்றுக் கொண்டதும் ஸ்டாலின் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டார்.

அதன் பின் 33 அமைச்சர்களுக்கும், ‘ஐ...’ என்று தொடங்கும் பதவியேற்பு, ரகசியக்காப்பு உறுதிமொழியை நின்றுகொண்டே செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால். ஓர் அமைச்சர் இரு உறுதிமொழிகளையும் வாசிப்பது, பின் இரண்டிலும் கையெழுத்திடுவது, பின் ஆளுநரை வணங்கிச் செல்வது ஆகியவற்றுக்கு குறைந்தது ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 34 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆளுநர் பன்வாரிலால் நின்றுகொண்டே இருந்தார். ஆனபோதும் கொஞ்சம்கூட அவர் சோர்வடையவில்லை. பதவியேற்பு முடிந்தபிறகு அமைச்சரவை சகாக்களோடு கூட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, பின் தேனீர் விருந்திலும் உற்சாகமாகவே கலந்துகொண்டார் ஆளுநர் பன்வாரிலால்.

81 வயதான பன்வாரிலால் புரோகித் இந்த கொரோனா காலத்திலும் இப்படி ஒரு பதவியேற்பு விழாவில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டே இருந்தை ஆளுநர் மாளிகைக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் ஆச்சரியத்தோடு பேசிக் கொண்டனர்.

ஆளுநர் மாளிகை வட்டாரத்திலோ, ‘சிறந்த உணவுக் கட்டுப்பாடு, தினமும் யோகா என்று கட்டுப்பாடான வாழ்வு வாழ்ந்து வருவதால்தான் பன்வாரிலால் இப்படி இளைஞரைப் போல் செயல்பட முடிகிறது” என்கிறார்கள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 7 மே 2021