மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

ட்ரெண்டிங்கான ‘திராவிட இனத்தைச் சார்ந்தவன்’!

ட்ரெண்டிங்கான ‘திராவிட இனத்தைச் சார்ந்தவன்’!

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஒவ்வொருவரும் உறுதிமொழியை வாசித்து அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில், ஸ்டாலின் பதவி ஏற்பு விழா தொடர்பான பேச்சுகள் நிறைந்துள்ளன. இதனால் #CMSTALIN, #முகஸ்டாலின்எனும்நான், #TNCabinet ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், அவரது சமூக வலைதளப் பக்கங்களின் சுயவிவரப் பகுதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக அவரது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர், எதிர்க்கட்சி தலைவர் போன்றவை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது, 'தமிழக முதல்வர்', 'திமுக தலைவர்', 'திராவிட இனத்தைச் சார்ந்தவன்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று, அவரது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படத்தில், ‘இனி தமிழகம் வெல்லும்’ என்று இடம்பெற்றுள்ளது.

‘திராவிட இனத்தைச் சார்ந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், ‘Belongs to the Dravidian stock’ என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

1962-ல் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, தனது உரையில், ‘'நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 7 மே 2021