மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

தயாநிதியைக் கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி

தயாநிதியைக் கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற விழாவில், தயாநிதி அழகிரியை கட்டியணைத்து உதயநிதி வரவேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவருமான மு.க.அழகிரி, கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொடர்ந்து திமுகவினர் மீதும், சகோதரர் ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி, ‘ஸ்டாலின் முதல்வராகவே முடியாது. நானும் என் ஆதரவாளர்களும் விடமாட்டோம்’ என்று கூறியது திமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கூட்டத்திக்கு பின்னர் அழகிரி திமுகவுக்கு எதிராக எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், அவர் பாஜகவில் இணைவார், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் இணைவார் என்று தகவல்கள் பரவின.

இந்தச்சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் மு.க.ஸ்டாலினிடம் பிரபலங்கள் குறித்து ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு கேட்கப்பட்டது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வரிசையில், மு.க.அழகிரி என்று சொன்னதும், ‘என்னுடைய அண்ணன்’ என்று பதிலளித்தார் ஸ்டாலின்.

இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியுடன் இன்று முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார் மு.க.ஸ்டாலின். இதனையொட்டி நேற்று தனது முகநூல் பக்கத்தில் முக.அழகிரி வாழ்த்து தெரிவித்தார்.

அந்த பதிவில், “முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்

எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் "திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்" என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பதவி ஏற்பு விழாவில் முக.அழகிரி கலந்துகொள்வாரா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் இருந்தன.

ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் முக.அழகிரியின் மகன், தயாநிதி அழகிரி கலந்துகொண்டார். சகோதரர் தயாநிதியை பார்த்ததும் கட்டியணைத்து வரவேற்றார் உதயநிதி. இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 7 மே 2021