மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்...

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்...

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று மே 7ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று காலை 9.10 அளவில்... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று தொடங்கி பதவி ஏற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஸ்டாலின். பதவி ஏற்பு உறுதி மொழியையும் ரகசிய காப்பு பிரமாணத்தையும் உளமாற என்று கூறி மேற்கொண்டார் ஸ்டாலின்.

ஸ்டாலின் பதவியேற்ற அந்த நொடியில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் திடீரெனக் கண்கலங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவரோடு உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

திமுகவில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரை அடுத்து மூன்றாவது முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

பதவி ஏற்றுக் கொண்டதும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களுக்கு பதவியேற்பு

உறுதிமொழியை ஆளுநர் செய்து வைத்து வருகிறார்.

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 7 மே 2021