மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

ஓராண்டில் அமைச்சராகிறார் உதயநிதி

ஓராண்டில் அமைச்சராகிறார் உதயநிதி

தமிழகத்தில் மு.கஸ்டாலின் தலைமையில் இன்று (மே 7) புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிலையில் திமுகவில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பாரா, இல்லையா என்று தகவல்கள் சர்ச்சைகளாக வெடித்த நிலையில், அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதன்மைச் செயலாளர் நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் நிற்பதில் இருவேறு கருத்தில்லை என்று கூறினர். இது நடந்தது தேர்தலுக்கு முன்பு.

அதேபோல சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நின்ற உதயநிதி ஸ்டாலின் வெற்றியும் பெற்றார். வெற்றிபெற்ற கையோடு திமுக முக்கியஸ்தர்கள் மட்டுமல்ல கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், எதிரணியில் இடம்பெற்றிருக்கும் விஜயகாந்த் போன்ற தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

இதன் மூலம், ‘திட்டமிட்டபடி உதயநிதி அமைச்சராகிவிடுவார் போலிருக்கிறது. அதனால்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வாழ்த்துகளையும் முன்கூட்டியே பெற்று வருகிறார்’என்று திமுக வட்டாரத்திலேயே பேச்சுகள் எழுந்தன.

ஆனால் நேற்று (மே 6) வெளியான திமுகவின் அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது,

“உதயநிதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியானபோதே அவரது வெற்றியும் அவர் அமைச்சரவையில் இடம்பெறுவதும் உறுதியானது. ஸ்டாலின் யோசித்தபோதும் குடும்பத்தினர் வற்புறுத்தி உதயநிதிக்கான கேபினட் ரேங்க்கை உறுதிப்படுத்தியதாக கட்சியிலேயே பேசினார்கள். குறிப்பாக உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை வழங்கப்படும் என்று இளைஞரணி நிர்வாகிகளே நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி வந்த பின் இந்த முடிவில் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எதிர்பார்த்தபடி 150-க்கும் மேற்பட்ட சீட்டுகளில் திமுக மட்டுமே வென்று கூட்டணியோடு சுமார் 180, 190 என வந்திருந்தால் அதாவது அசுர பலத்தில் ஆட்சி அமைந்திருந்தால் உதயநிதி நிச்சயம் வலிமையான துறை அமைச்சராகியிருப்பார். இப்போது 125 இடங்கள்தான் திமுக வெற்றிபெற்றிருக்கிறது. இந்த நிலையில் அமைச்சரவையில் உதயநிதியை நுழைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார் ஸ்டாலின். உதயநிதி அமைச்சர் என்றால் முக்கிய துறையைக் கொடுத்தால்தான் சரியாக இருக்கும். இப்போதே சீனியர்கள் பலர் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே இன்னும் சில மாதங்களிலோ, ஓராண்டிலோ, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது உதயநிதிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 7 மே 2021