மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

விஜயபாஸ்கருக்கு கொரோனா!

விஜயபாஸ்கருக்கு கொரோனா!

கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசியல் திரை பிரபலங்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி, இரண்டு டோஸும் போட்டுக்கொண்ட முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதுபோன்று தற்போது, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

எனினும், நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுச் சுகாதார பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 7 மே 2021